3 நாளில் 100 கோடி வசூல் செய்த ‘லிங்கா’

3 நாளில் 100 கோடி வசூல் செய்த ‘லிங்கா’

செய்திகள் 15-Dec-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்பார்த்ததுதான்... ரஜினியின் ‘லிங்கா’ படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என அனைவருமே எதிர்பார்த்ததுதான்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்து ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ‘லிங்கா’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதுவரை எந்த தென்னிந்திய படத்திற்கும் கிடைக்காத அளவிற்கு மலைக்க வைக்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனலாம்.

தமிழகத்தில் 700 திரையரங்குகள், கேரளாவில் 200 திரையரங்குகள், ஆந்திராவில் 700 திரையரங்குகள், மற்ற இந்திய மாநிலங்களில் 300க்கும் மேல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளுக்கும் மேல் என கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘லிங்கா’ படம் முதல் 3 நாட்களில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 55 கோடி ரூபாய், மற்ற இந்திய மாநிலங்களில் 26 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 20 கோடி ரூபாய்... ஆக மொத்தம் முதல் 3 நாட்களில் 101 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்புதரப்பிற்கு நெருங்கியவர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுவரை எந்த தென்னிந்திய படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லையாம்.

விமர்சனரீதியாக படத்திற்கு எதிரான கருத்துக்கள் குவிந்தபோதிலும், ரஜினி மீதிருந்த எதிர்பார்ப்பாலும், ஒட்டுமொத்த திரையரங்குகளும் ‘லிங்கா’விற்காக ஒதுக்கப்பட்டதாலும் இவ்வளவு பெரிய தொகை வசூல் செய்ய சாத்தியமிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;