நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!

நா.முத்துக்குமாருக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம்!

செய்திகள் 15-Dec-2014 10:33 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முன்னணி பாடலாசியராக திகழ்ந்து வருபவர் நா.முத்துக்குமார். இவர் ‘தங்கமீன்கள்’ படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை...’ பாடலுக்காக கடந்த ஆண்டு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர், முனைவர் செல்வின்குமார் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நா.முத்துக்குமார் வாங்கும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. 2006- ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;