விஜய்க்கு கிடைத்த 30 லட்சம்!

விஜய்க்கு கிடைத்த 30 லட்சம்!

செய்திகள் 15-Dec-2014 10:23 AM IST Chandru கருத்துக்கள்

ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். தனது ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தனது ரசிகர்களுடன் இணைந்தே கொண்டாடி வருகிறார். இதுதவிர தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நலத்திட்டப்பணிகள், இரத்ததானம், அன்னதானம் உள்ளிட்டவற்றையும் அவ்வப்போது செய்து வருகிறார். நேரடியாக தொடர்பு கொள்வது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கின் மூலமும் தனது ரசிகர்களுடன் விஜய் உரையாடி வருகிறார். அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் அதிகாரபூர்வ பக்கம் ஒன்றை சமீபத்தில் துவங்கினார் விஜய். அதை விஜய்யின் ஏராளமான ரசிகர்கள் ‘லைக்’ செய்து வருகின்றனர். தற்போது விஜய்யின் அந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு (facebook.com/ActorVijay) 30 லட்சம் ‘லைக்’குகள் கிடைத்துள்ளன. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் செய்திருக்கிறார் விஜய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;