‘சண்டமாருதம்’ சரத்குமாருக்கு ரஜினி வாழ்த்து!

‘சண்டமாருதம்’ சரத்குமாருக்கு ரஜினி வாழ்த்து!

செய்திகள் 15-Dec-2014 9:53 AM IST VRC கருத்துக்கள்

‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ போன்ற படங்களை தயாரித்த ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ பட நிறுவனம் தற்போது சரத்குமார் வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. ‘மேஜிக் ஃபிரேஸ்’ நிறுவனம் சார்பில் சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், இதே நிறுவனத் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாரி’, விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘இது என்ன மாயம்’, ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ ஆகிய 3 படங்களின் அறிமுக விழாவும் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.
சரத்குமார் கேள்விப்பட்ட சில நிஜ சம்பவங்களை வைத்து, ‘சண்டமாருதம்’ படத்தின் திரைக்கதையை கிரைம் கதை எழுத்தாளரான ராஜேஷ்குமார் எழுதியிருக்கிறார். திரைக்கதையை ராஜேஷ் குமார் எழுதி முடித்ததும் அதை இயக்குனர் வெங்கடேஷ் சரத்குமாரிடம் சொல்லும்போது, ‘இதில் ஹீரோவுக்கு அவ்வளவு வேலை இலை, வில்லன் கேரக்டர்தான் பவர்ஃபுல்லானது. அந்த வில்லன் கேரக்டரில் வேறொருவர் நடிப்பதை விட நீங்களே நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று சரத்குமாரிடம் சொல்லியிருக்கிறார் வெங்கடேஷ். அப்போது வில்லனாக நடிப்பதா என்று யோசித்தாராம் சரத்குமார். பிறகு முழு சம்மத்த்துடன், முழு மூச்சோடு இறங்கி நடித்து அந்த வில்லன் கேரக்டரில் அதகளம் பண்ணியிருக்கிறாராம் சரத்குமார். அதை படத்தின் டிரைலரை பார்த்தபோது நமக்கும் புரிந்துவிட்டது. அந்த கேரக்டர் தான் கிடா மீசையுடன் சுருட்டு பிடித்தவாறு கம்பீரமாக தோன்றும் வில்லன் கேரக்டர்!

வில்லனாக நடித்தது குறித்து சரத்கும்மார் பேசும்போது, ‘‘இப்பட்த்தின் டிரைலர் ரெடியானதும் அதை ரஜினிகாந்திடம் காண்பித்தேன். அப்போது அவர் டிரைலரை பார்த்துவிட்டு என்னை பாராட்டியதோடு, இப்போதெல்லாம் ஹீரோ வில்லனாகவும் நடித்தால் அதற்கு தனி மரியாதை உண்டு. ரசிகரக்ளும் அதை விரும்புவாங்க. நீங்களும் இப்போது அந்த வழிக்கு திரும்பியிருக்கீங்க, சந்தோஷ்ம், என்னோட வாழ்த்துக்கள்’’ என்றார். இப்படத்தில் என்னுடன் ஓவியா, மீரா நந்தன், சமுத்திரக்கனி, விஜயகுமார், ராதாரவி, தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம்புலி முதலானோர் நடித்திருக்கிறார்கல். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது’’ என்றார் சரத்குமார்.

விழாவில் விஜயகுமார், ராதாரவி, தனுஷ், பாலாஜி மோகன், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், இயக்குனர் விஜய், பாபி சிம்ஹா, இயக்குனர் ஆடம் தாஸ், ‘பாம்பு சட்டை’ படத்தை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் மனோபாலா, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீஃபன் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;