மீண்டும் இணையும் சித்தார்த் - சமந்தா

மீண்டும் இணையும் சித்தார்த் - சமந்தா

செய்திகள் 15-Dec-2014 9:50 AM IST Chandru கருத்துக்கள்

திரையுலகில் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் சித்தார்த்தும், சமந்தாவும் ஏற்கெனவே ‘ஜபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த இளமைக்கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது.

துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ மலையாள படம் தமிழ், தெலுங்கில் ரீமேக்காகவிருக்கிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கவிருக்கும் இப்படத்தில் ஆர்யாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருக்கிறாராம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணியும், நடிகர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;