‘‘ரசிகனே என் முதலாளி!’’ - விஜய் பெருமிதம்

‘‘ரசிகனே என் முதலாளி!’’ - விஜய் பெருமிதம்

செய்திகள் 15-Dec-2014 8:56 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘கத்தி’ படம் தற்போது 50 நாட்களைக் கடந்திருக்கிறது. படக்குழுவினர் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் ‘கத்தி’ படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்புக் கிடைத்திருப்பதால் சந்தோஷத்திலிருக்கிறது ‘கத்தி’ டீம். இப்படத்தின் வெற்றி விழாவை விஜய் ரசிகர் மன்றங்கள் இணைந்து திருநெல்வேலி பாளையங்கோட்டையில் விமரிசையாக நேற்று (டிசம்பர் 14) கொண்டாடினர். இவ்விழாவில் கலந்து கொண்ட படத்தின் ஹீரோ விஜய்க்கு ‘வீரவாள்’ ஒன்று பரிசளிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் விஜய்...

‘‘சினிமாவும் கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டு போல்தான். அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் கோல் அடிக்க முடியும். அதேபோல்தான் சினிமாவில் அத்தனை பேரும் இணைந்து பணியாற்றும்போதுதான் வெற்றி கிடைக்கும். எனவே சினிமா வெற்றிக்கு ஒருவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

குடும்பத்தைக் கவனிக்காமல் எனது படத்தைப் பார்ப்பதற்கு எந்த ரசிகரும் வரவேண்டாம். அப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு தேவையுமில்லை. பெற்றோர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது.

வேலை செய்யும் இடங்களில் சம்பளம் கொடுப்பவரே முதலாளி. அந்தவகையில் எனது படத்தை ரசிகர்கள் காசு கொடுத்து பார்ப்பதால்தான் எனக்கு சம்பளமே கிடைக்கிறது. எனவே என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களாகிய நீங்கள்தான் என் முதலாளி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று பெருமிதமாக பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;