’சதுரங்கவேட்டை’யை தொடர்ந்து பாம்பு சட்டை!

’சதுரங்கவேட்டை’யை தொடர்ந்து பாம்பு சட்டை!

செய்திகள் 13-Dec-2014 5:49 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனரும், நடிகருமான மனோபாலா சமீபத்தில் தயாரித்த படம் ‘சதுரங்கவேட்டை’. எச்.வினோத் இயக்கத்தில் ’நட்டி’ நடராஜ் நடித்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நன்றாக பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் ஃபிரேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் மனோபாலா. இப்படத்தில் கதையின் நாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, இப்படத்தை ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர் ஆவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அசீஸ் அசோக் இப்பத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளை துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;