‘ஆம்பள’யில் இணைந்த நான்காவது கதாநாயகி!

‘ஆம்பள’யில் இணைந்த நான்காவது கதாநாயகி!

செய்திகள் 13-Dec-2014 1:53 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஆம்பள’ படத்தில் ஹன்சிகா மோத்வானி, மாதவி லதா, மதுரிமா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இப்போது நான்காவது ஹீரோயினாக பூனம் பஜ்வாவும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஆனால் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட மட்டும்தானாம்! பூனம் பஜ்வா தற்போது ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு நாயகியாக நடிக்கிறார். ‘ஆம்பள’ படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழன்’ ஆதி இசை அமைக்கிறார். இவரது இசையில், ‘மெட்ராஸ் டூ மதுரை ஊரு… எல்லாம் அதிர, மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதிற…’ என்று துவங்கும் பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார் பூனம் பஜ்வா. இப்பாடல் காட்சி விரைவில் படமாக்கப்படவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;