ஆஸ்கர் பட்டியலில் ‘கோச்சடையான்’

ஆஸ்கர் பட்டியலில் ‘கோச்சடையான்’

செய்திகள் 13-Dec-2014 12:12 PM IST VRC கருத்துக்கள்

உலக சினிமா விருதுகளில் ஆஸ்கார் விருது மிக உயர்ந்தாக மதிக்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டின் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா விரைவில் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த அண்டின் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்குரிய போட்டிக்கு 114 படங்கள் போட்டி போடுகின்றன! அதில் 3 படங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படங்கள் ‘கோச்சடையான்’ மற்றும் ‘THE HUNDRED FOOT JOURNEY’, ‘MILLION DOLLER ARM’ ஹாலிவுட் படங்கள்! ஏற்கெனவே இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;