முதல் நாள் வசூலில் ‘லிங்கா’ சாதனை!

முதல் நாள் வசூலில் ‘லிங்கா’ சாதனை!

செய்திகள் 13-Dec-2014 11:09 AM IST VRC கருத்துக்கள்

பெரிய எதிர்பார்ப்போடும், பரபரப்புடனும் நேற்று வெளியாகிய ரஜினியின் ‘லிங்கா’ ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் ‘லிங்கா’ 680-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று வெளியான ‘லிங்கா’, ஒரு நாளிலேயே 16 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம்! இதுவரை தமிழகத்தில் வெளியான தமிழ் படங்களில் எந்த படமும் இவ்வளவு வசூல் ஒரே நாளில் செய்ததில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ‘லிங்கா’ 16 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், உலகம் முழுக்க வெளியாகியுள்ள ‘லிங்கா’வின் ஒரு நாள் மொத்த வசூல் 25 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;