ஒரே நிறுவனத்தின் 3 பட விழாக்கள்!

ஒரே நிறுவனத்தின் 3 பட விழாக்கள்!

செய்திகள் 13-Dec-2014 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தற்போது மூன்று படங்களை தயாரிக்கின்றனர். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. இப்படத்தின் ஆடியோ நாளை வெளியாக இருக்கிறது. இன்னொரு தயாரிப்பான விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் அறிமுகவிழா நாளை நடைபெறவிருக்கிறது. மூன்றாவது தயாரிப்பான ‘மாரி’ படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார். இப்படத்தில் தனுஷும், காஜல் அகர்வாலும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக விழாவும் நாளை நடைபெறவிருக்கிறது. இதில் சரத்குமார் நடித்துள்ள சண்டமாருதம் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;