‘சூரியன்’ பட வசனத்தில் ஒரு படம்!

‘சூரியன்’ பட வசனத்தில் ஒரு படம்!

செய்திகள் 12-Dec-2014 3:05 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்த ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி பேசும். ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். இப்போது அந்த வசனத்தை படத் தலைப்பாகக் கொண்டு ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ‘தற்காப்பு’, ‘கரையோரம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கணேஷ் பிரசாத் நடிக்க, இவருடன் முக்கியமான கேரக்டரில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், மனோபாலா, சுப்பு அருணாசலம் என பல நகைச்சுவை நடிகர்களும் நடிக்கும் இப்படத்தை சக்தி அஜய்குமார் இயக்குகிறார். ‘குளோபல் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அனந்தராம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொடைக்கானலில் ஆரம்பமானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;