ஜெயப்பிரதா மகனை பாராட்டிய ரஜினி!

ஜெயப்பிரதா மகனை பாராட்டிய ரஜினி!

செய்திகள் 12-Dec-2014 3:05 PM IST VRC கருத்துக்கள்

‘நினைத்தாலே இனிக்கும்’ படம் உட்பட பல படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளவர் ஜெயப்பிரதா. அத்துடன் ‘லிங்கா’ படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா ரஜினிகாந்தை நட்பு ரீதியாக ‘லிங்கா’ படபிடிப்பின்போது சந்தித்துள்ளார்.

அப்போது தான் தயாரித்து கொண்டிருக்கும் ‘உயிரே உயிரே’ படத்தின் முன்னோட்டத்தை ரஜினிக்கு காண்பித்துள்ளார். அந்த முன்னோட்டத்தை வெகுவாக பாரட்டிய ரஜினிகாந்த், ‘உயிரே உயிரே’ பட முன்னோட்டத்தை தன் படமான ‘லிங்கா’ வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பினரிடம் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பெருந்தன்மையை கண்டு பெரும் மகிழ்ச்சிடடைந்த ஜெயப்பிரதா அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். ‘உயிரே உயிரே’ படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் ஜெயப்பிரதாவின் மகன் சித்து என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இப்படத்தை ஏ.ஆர். ராஜசேகர் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;