ரியல் எஸ்டேட் தொழிலில் விக்ரம் பிரபு!

ரியல் எஸ்டேட் தொழிலில் விக்ரம் பிரபு!

செய்திகள் 12-Dec-2014 3:01 PM IST VRC கருத்துக்கள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளவர் அன்பு செழியன். இவர் தனது ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவன்ம் சார்பில் முதன் முதலாக தயாரித்துள்ள படம் ‘வெள்ளக்கார துரை’. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ‘ஆடுகளம்’ நரேன் முதலானோரும் நடித்துள்ளனர். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள எழில் இயக்கும் 9-ஆவது படம் இது. ‘வெள்ளக்காரதுரை’ குறித்து இயக்குனர் எழில் கூறும்போது,

‘‘விக்ரம் பிரபு வில்லேஜ் சப்ஜெக்ட்டில் நடிக்கும் முதல் படம் இது. கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி வேலை வெட்டி எதுக்கும் செல்லாமல் ஊர் சுற்றித் திரிபவர்களை வெள்ளக்கார துரை என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் விக்ரம் பிரபு இப்படத்தில் நடித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் அவர் கேரக்டர் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலின் நல்லது கெட்டதுகளையும், தொட்டிருக்கிறோம். நான் ஏற்கெனவே இயக்கிய படங்களை போன்று இப்படமும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக அமைந்துள்ளது. எற்கெனவே நான் இயக்கிய ‘மனம் கொத்தி பறவை’, ‘தேசிங்கு ராஜா’ படங்களுக்கு இசை அமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் ரிலீசாக இம்மாதம் 25 -ஆம் தேதி திரைக்கு வருகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;