‘லிங்கா’ வழக்கு… தீர்ப்பு வந்தது!

‘லிங்கா’ வழக்கு…  தீர்ப்பு வந்தது!

செய்திகள் 11-Dec-2014 2:42 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ’லிங்கா’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த ரவிரத்னம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதைக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். நாளை ‘லிங்கா’ வெளியாகவிருக்கும் நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் ‘லிங்கா’ படத்தை வெளியிட சில நிபந்தனைகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அந்த உத்தரவில் 10 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் கட்டிவிட்டு ‘லிங்கா’வை வெளியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 5 கோடி ரூபாய் ரொக்கமாகவும், மீதி 5 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதமும் தந்தால் போதுமானது என்றும் கூறியுள்ளனர். ‘லிங்கா’ பட தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில் நாளை பகல் 12 மணிக்குள் பணத்தை கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் நாளை ‘லிங்கா’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவது உறுதியாகிவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;