‘‘அதாரு... அதாரு...’’ - சிங்கிள் டிராக் விமர்சனம்

‘‘அதாரு... அதாரு...’’ - சிங்கிள் டிராக் விமர்சனம்

கட்டுரை 11-Dec-2014 12:09 PM IST Chandru கருத்துக்கள்

அஜித் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அதோடு சிறிது இடைவெளிவிட்டு ‘என்னை அறிந்தால்’ மூலம் மீண்டும் ¬கோர்த்திருக்கிறார்கள் கௌதம் மேனனும், ஹாரிஸும். இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இப்படத்தின் முதல் பாடல் வெளிவருகிறதென்றால், அதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்பார்ப்பிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இதோ பாடலும் வந்துவிட்டது....

முதலிலேயே சொல்லப்பட்டதுபோல இப்பாடல் ‘குத்து’ ரகத்தை சேர்ந்ததுதான்... ‘கௌதம் மேனன் படத்தில் இப்படி ஒரு பாடலா?’ என பாடலைக் கேட்டதும் லேசாக ‘ஜெர்க்’காகிறது. போகட்டும்... அஜித்தின் நான்குவித தோற்றங்களில், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும் அஜித்தின் ஓபனிங் பாடல் என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இப்பாடலில் அஜித்துடன் இணைந்து அருண் விஜய்யும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் வரிகளில் பெரிதாக புதுமை எதுவும் இல்லையென்றாலும், ‘‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்... பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்!’’ போன்ற வரிகள் அஜித் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கலாம். பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘‘வா ராஜா... வா...’’ என்ற கேரஸில் இருக்கும் உற்சாகம் சரணத்திற்கு தொடரவில்லை. மேளம், உருமி, டிரம்செட், ஆங்காங்கே நாதஸ்வரம் என குத்துப்பாடலுக்கென்றே இருக்கும் சில வழக்கமான ட்யூன்களையே இப்பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் ஹாரிஸ். விஜய் பிரகாஷின் குரலே இப்பாடலில் ஓங்கி ஒலித்திருக்கிறது. கானா பாலா கூடவே கோரஸ் பாடியதுபோல பின்னணியில் லேசாக ஒலித்திருக்கிறார்.

ஒன்று நிச்சயம்.... இப்பாடலை தியேட்டரில் பார்க்கும்போது அஜித்தின் அட்டகாசமான ஆட்டம் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்பைரஸ் கொடுக்கும்!

மொத்தத்தில்.... இன்னும் எதிர்பார்த்தோம் ஹாரிஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;