மேஜிக் மேனாகும் விக்ரம் பிரபு!

மேஜிக் மேனாகும் விக்ரம் பிரபு!

செய்திகள் 11-Dec-2014 12:00 PM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் விஜய். இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்திற்கு தற்போது ‘இது என்ன மாயம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக விக்ரம் பிரபுவே தெரிவித்துள்ளார். ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரில் விக்ரம் பிரபுவின் தோற்றத்தை பார்க்கும்போது இதில் அவர் ஒரு மேஜிக் மேனாக நடிப்பது போலவும், இப்படம் மேஜிக் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

விக்ரம் பிரபு நடிக்கும் இன்னொரு படமான ‘வெள்ளக்கார துரை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;