இத்தாலி நாட்டுக்கு பறக்கும் விஷால், ஹன்சிகா மோத்வானி!

இத்தாலி நாட்டுக்கு பறக்கும் விஷால், ஹன்சிகா மோத்வானி!

செய்திகள் 11-Dec-2014 11:39 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக நடிகர் விஷால் தனது ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் தேதி குறிப்பிட்டு தான் படப்பிடிப்பையே துவங்குகிறார். அந்த வரிசையில் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டு துவங்கப்பட்ட ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்பும் இப்போது முடியும் கட்டத்தில் இருக்கிறது. சுந்தர்.சி.இயக்கி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படம் பிடிக்க விஷால், ஹன்சிகா மோத்வானி, இயக்குனர் சுந்தர்.சி உட்பட ‘ஆம்பள’ படக் குழுவினர் விரைவில் இத்தாலி நாட்டுக்குப் பறக்கவிருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு அங்கு வருகிற 16 -ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். இப்படத்திற்கு ’ஹிப் பாப் தமிழன்’ ஆதி இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - புதிய டிரைலர்


;