சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள்!

செய்திகள் 11-Dec-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுன்டேஷன் அமைப்பு சார்பில் சென்னையில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த வருடம் நடக்கவிருக்கும் 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா வருகிற 18-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், ஆஸ்திரேலியா, போலன்ட், பிரேசில், பல்கேரியா, போலந்து உட்பட 45 வெளிநாடுகளைச் சேர்ந்த 171 திரைப்டங்கள் திரையிடப்படவிருக்கிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 17 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த வருடம் முதல் தமிழ் படங்களுக்கிடையிலான போட்டியும் நடைபெறவிருக்கிறது. இதற்காக 12 படங்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அந்த படங்கள் கார்த்தி நடித்து, பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘என்னதான் பேசுவதோ’, பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம், இயக்கம்’, ‘குற்றம் கடிதல்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சலீம்’, ‘சிகரம் தொடு’, ‘தெகிடி’, ‘வெண்நிலா வீடு’, ‘பூவரசம் பீப்பி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சதுரங்கவேட்டை’ ஆகிய படங்களாகும். இந்த போட்டி பிரிவின் கடைசியில் 3 விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது.

சென்னையிலுள்ள உட்லான்ட்ஸ் தியேட்டரில் இதற்கான துவக்க விழா நடைபெறவிருக்கிறது. உட்லான்ட்ஸ், உட்லான்ட்ஸ் சிம்பொனி, ஐனாக்ஸ் (2 ஸ்கிரீன்) கேசினோ, ரஷ்யன் கல்சுரல் சென்டரிலுள்ள தியேட்டர் என 6 தியேட்டர்கலில் ஒவ்வொரு நாளும் 5 திரைப்படங்கள் வீதம் திரையிடப்படவிருக்கிறது. துவக்க விழா படமாக ‘இன் த நேம் ஆஃப் மை டாட்டர்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது. இது புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கோவா சரவதேச திரைப்பட விழா, பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழா என எல்லா திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் இவ்விழாவில் சிறப்பு காட்சியாக திரைப்படவிருக்கிறது.

இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகை சுஹாசினி, இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பின் செயலாளர் தங்கராஜ ஆகியோர் செய்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;