அனிமேஷன் திரைப்படமாகும் கல்கியின் ‘பொன்னியின் செலவன்’

அனிமேஷன் திரைப்படமாகும் கல்கியின் ‘பொன்னியின் செலவன்’

செய்திகள் 10-Dec-2014 5:41 PM IST Top 10 கருத்துக்கள்

வரலற்று நாவல்களில் ‘கல்கியின் ‘பொன்னியின் செலவன்’ நாவலுக்கு தனி ஒரு இடம் உண்டு. இந்த நாவல் இன்றும் பல்வேறு பதிப்புகளாக வெளியாகி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படைப்பை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று இதனை 2டி அனிமேஷன் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். இதனை ஃபைவ் எலிமென்ட்ஸ்’ என்ற நிறுவனம், ‘வளமான தமிழகம்’ என்ற அமைப்பின் ஆதரவுடன் தயாரிக்கிறது. வளமான தமிழகம் அமைப்பின் நிறுவனர் பொ.சரவணராஜா இந்த படைப்பு குறித்து பேசும்போது,
‘’பொன்னியின் செல்வன் நாவலுக்கு அவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். எனக்கு இந்த நாவல் ரொம்பவும் பிடிக்கும். அற்புதமான இந்த நாவலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயறிதான் இந்த அனிமேஷன் படம். இன்றைய காலகட்டத்தில் வரலற்று படைப்புகள் ரசிக்கப்படுமா என்று நிறைய பேர் கேட்டர்கள். சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இன்று தமிழ் இளைஞர்கள் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை, வரலாற்றை, மரபை, பாரம்பர்யத்தை எல்லாம் அறியாமல் இருக்கிறார்கள். அதை அப்படியே விட்டால் மறக்கப்பட்டு விடும். உண்மையான தமிழக வரலாறுகளை கல்கியால் புனையப்பட்ட காவியம் தான் ‘பொன்னியின் செல்வன்’. இது இன்றைய தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும். அதற்காக உருவாக்கப்படுவது தான் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் படம்.
இப்படத்திற்கான அனிமேஷன் இயக்குனராக மு.கார்த்திகேயன் பணி புரிய இருக்கிறார். இவர் இத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றுக்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபல தமிழ் நட்சத்திரங்களை அணுக உள்ளோம். இதுவரை வந்த அனிமேஷன் படங்களிலிருந்து இப்படம் தரத்திலும் கதை சொல்லுதலிலும் மாறுபட்டு இருக்கும். சமீபத்தில் வெளிவந்த ‘அனுமான் 2டி’, ‘தெனாலி ராமன்’, ‘சோட்டா பீம்’ போன்ற அனிமேஷன் படங்கள் நல்ல வெற்றியடைந்தது. அந்த வரிசையில் இப்படமும் வெற்றிபெறும் வகையில் தரமாக தயாரிக்க உள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;