மாயமாய் மறைந்துபோன ‘லிங்கா’ டிக்கெட்டுகள்!

மாயமாய் மறைந்துபோன ‘லிங்கா’ டிக்கெட்டுகள்!

செய்திகள் 10-Dec-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

ஓபனிங் எப்படி இருக்க வேண்டுமென சூப்பர்ஸ்டார் படத்தைப் பார்த்துதான் ஒவ்வொருமுறையும் தெரிந்து கொள்கிறார்கள் உலகமெங்கும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள். ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து மீண்டும் தங்கள் தலைவனை திரையில் பார்க்கும் சந்தோஷத்தில் இருக்கிறது சினிமா வட்டாரங்கள். இடையில் ‘கோச்சடையான்’ படம் வெளிவந்தாலும், ரஜினி தரிசனம் என்பது ரசிகர்களைப் பொறுத்தவரை ‘லிங்கா’தான்.

நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் ‘லிங்கா’ படத்திற்காக தமிழகத்தில் மட்டும் 700க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கேரளாவிலும் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் லிங்கா ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் ‘லிங்கா’ படத்திற்கான முன்பதிவுகள் இன்று அதிகாலை 12 மணியிலிருந்து துவங்கியது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ‘லிங்கா’ டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டுமென பல ரசிகர்களும் அலாரம் வைத்து எழுந்து ‘ஆன்லைனு’க்குச் சென்றதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் ‘லிங்கா’ படத்திற்கான முதல் மூன்று நாள் ஷோக்களுக்கான அத்தனை டிக்கெட்டுகளும் முடிந்துபோய்விட்டன.

குறிப்பாக சத்யம் சினிமாவின் ராயப்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர், திருவான்மியூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில், ஒவ்வொரு நாளும் 100 காட்சிகளுக்கும் அதிகமாக ‘லிங்கா’ படத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், எந்த தியேட்டரிலும் எந்த காட்சிக்கும் முதல் மூன்று நாட்களுக்கு முன்வரிசையில் கூட இடமில்லை. இதுவரை எந்தவொரு படத்திற்கும் இவ்வளவு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டதில்லை, இத்தனை வேகமாக முன்பதிவுகள் முடிக்கப்பட்டதும் இல்லை.

தலைவர் ராக்ஸ்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;