பாலாஜி மோகனுக்கு லீவ் லெட்டர் அனுப்பிய தனுஷ்!

பாலாஜி மோகனுக்கு லீவ் லெட்டர் அனுப்பிய தனுஷ்!

செய்திகள் 10-Dec-2014 10:23 AM IST Chandru கருத்துக்கள்

‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனது அடுத்த படமாக பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். வரும் வெள்ளிக்கிழமை தன்னால் ‘மாரி’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது எனவும், தனக்கு விடுமுறை வழங்க வேண்டுமெனவும் நடிகர் தனுஷ், ட்விட்டர் மூலமாக இயக்குனர் பாலாஜி மோகனுக்கு வேடிக்கையாக ‘லீவ் லெட்டர்’ ஒன்றை அனுப்பியிருக்கிறார். எதற்காக இந்த ‘லீவ்’ என்று கேட்கிறீர்களா..? எல்லாம் சூப்பர்ஸடாரின் ‘லிங்கா’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான்.

ஏற்கெனவே, ‘லிங்கா’ படத்தை பார்ப்பதற்காக ‘லீவ்’ கேட்டு இன்ஜினியர் ஒருவர் தன் கம்பெனியில் அனுமதி கேட்டிருந்தது இன்டர்நெட்டில் பயங்கர பாப்புலர். தற்போது தனுஷும் அதேபோன்ற பாணியில் ‘லீவ்’ கேட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பயங்கர உற்சாகத்தையும், ‘லிங்கா’வுக்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது. தனுஷ் அனுப்பிய விடுமுறை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட இயக்குனர் பாலாஜி மோகன், ‘முதல் நாள் முதல் ஷோ பார்க்க தனக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தர வேண்டுமெ’ன வேண்டுகோள் விடுத்து சுவாரஸ்யமாக பதில் கூறிகிறார்.

ரஜினியின் மருமகன் என்பதெல்லாம் தனுஷுக்கு இரண்டாம்பட்சம்தான்.... எப்போதும் அவர் ‘தலைவரின்’ முதல் ரசிகன் என்பதையே அவரின் இந்த ‘ட்வீட்’ உணர்த்துகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;