‘காக்கி சட்டை’யின் அதிரடி முடிவால் குழம்பிய ரசிகர்கள்!

‘காக்கி சட்டை’யின் அதிரடி முடிவால் குழம்பிய ரசிகர்கள்!

செய்திகள் 10-Dec-2014 9:25 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘காக்கி சட்டை’ படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கிறார்கள். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக போலீஸாக நடிக்கும் இப்படத்தை வரும் கிறிஸ்துமஸுக்கு வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள ‘காக்கி சட்டை’ படத்தின் விளம்பரங்களில் ‘பொங்கல் வெளியீடு’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஷங்கரின் ’ஐ’, அஜித்தின் ‘என்னை அறிந்தால், விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய 3 படங்கள் தியேட்டர்களுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், இப்போது ‘காக்கி சட்டை’யும் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருப்பதால் ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்.

‘ஐ’ படத்தைப் பொறுத்தவரை ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு என்பது 100% சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அதேபோல் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ’ஆம்பள’ படங்கள் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகிறது என்பதும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பொங்கல் ரேஸில் ‘காக்கி சட்டை’யும் நுழைந்திருப்பதால், அப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகுமா, இல்லையென்றால் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகுமா? அப்படி வெளியாகும் பட்சத்தில் 4 படங்களுக்கும் எப்படி தியேட்டர்களை ஒதுக்குவார்கள் என கேள்விகள் குழப்பியடிக்கின்றன.

நாம் விசாரித்தவரை, பொங்கலுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் 3 படங்களில் ஏதோ ஒரு பெரிய படம் தன்னுடைய ரிலீஸை மாற்றிக் கொள்ளும் திட்டத்தில் இருப்பதை உணர்ந்துதான் ‘காக்கி சட்டை’ தன்னை பொங்கல் ரிலீஸாக அறிவித்திருக்கிறது என்கிறார்கள்.

நாள் நெருங்க நெருங்க பரபரப்பும் ஏறிக்கொண்டே போகிறது. பொங்கலோ பொங்கல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அனிருத் லைவ் கான்செர்ட் 2015


;