நாளைமுதல் திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’

நாளைமுதல் திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 10-Dec-2014 9:05 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீஸர் இந்திய அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு அஜித் ரசிகர்கள் ‘டிரென்ட்’ செய்யும் விதத்தைக் கண்டு இந்தி சினிமா ரசிகர்களே வாய் பிளக்கிறார்கள். இத்தனை எதிர்பார்ப்புகளோடு இருக்கும் இப்படத்தின் டீஸரை இதுவரை கம்ப்யூட்டர் மானிட்டர்களிலும், போன், டேப்லெட்களிலும் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இனி தியேட்டர்களிலும் கண்டுகளிக்கலாம். ஆம்... நாளை முதல் (டிசம்பர் 11) தியேட்டர்களிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸரை வெளியிடுகிறார்கள்.

அதோடு, ஹாரிஸின் இசையமைப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி, விஜய் பிரகாஷ், கானா பாலா பாடியுள்ள ‘அதாரு உதாரு’ பாடலும் இன்று இரவு 12.00 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். டீஸரை வெற்றிப்பெறச் செய்ததுபோலவே இந்தப் பாடலையும் அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியடைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறது படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;