50 லட்சம் திரையில் சேரன் படம்!

50 லட்சம் திரையில் சேரன் படம்!

செய்திகள் 9-Dec-2014 3:28 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ‘பாரதிகண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’ உட்பட பல தரமான வெற்றிப் படைப்புகளை தந்தவர் இயக்குனர் சேரன். சமீபத்தில் அவர் இயக்கியுள்ள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் ஒரு புது முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் ‘C2H’ (CINEMA TO HOME) என்பது. இதன் மூலம் புதிய திரைப்படங்களை நேரடியாக டி.வி.டி.மூலம் வீடுகளில் கண்டு களிக்க முடியும். சமீபகாலமாக இதன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சேரன் இத்திட்டத்தின் மூலம் தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை C2H மூலம் வருகிற ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இப்படத்தின் 50 லட்சம் டி.வி.டி.க்கள் விற்பனையாகும் என்றும், அதன் மூலம் சுமார் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குனர் சேரன். இது மாதிரி படத்தின் தயாரிப்பாளர்களே ஒரிஜினல் டி.வி.டி.களை வெளியிடுவதால் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாக வாய்ப்பில்லாமல் போகும்போது தயாரிப்பாளருக்கு போட்ட பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆக, சேரன் இயக்கி, தயாரித்துள்ள ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தை பொங்கல் திருநாளில் வீட்டிலிருந்தபடி பார்த்து மகிழும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;