‘பாக்ஸ் ஆபீஸி’ல் பாய்ந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’!

‘பாக்ஸ் ஆபீஸி’ல் பாய்ந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’!

செய்திகள் 9-Dec-2014 11:26 AM IST Chandru கருத்துக்கள்

வந்தால் வெற்றிப் படத்தோடுதான் வரவேண்டும் என்ற எண்ணத்தில் 3 வருடங்களாகக் காத்திருந்தார் சிபிராஜ். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை... ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் பாக்ஸ் ஆபிஸில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 20 நாட்களில் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா வெளிநாடுகளிலும் ‘நாய்கள் ஜாக்கிரதை’க்கு நல்ல வரவேற்பாம். சிபிராஜின் படங்களிலேயே இதுதான் அதிகபட்ச வசூல் செய்த படம் என்றும் கூறுகிறார்கள்.

அதோடு படத்தின் வெற்றியைப் பார்த்த சன் டிவி ‘சாட்டிலைட் உரிமை’க்காக நல்ல தொகை கொடுத்திருக்கிறதாம். தவிர, தெலுங்கு உரிமைக்காகவும் பெரிய கம்பனிகளிடமிருந்து ‘நாய்கள் ஜாக்கிரதை’க்கு நல்ல ஆஃபர் வந்திருப்பதாகவும் ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்ததில் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்திருக்கிறது ‘நாய்கள் ஜாக்கிரதை’ டீம். வாழ்த்துக்கள் சிபி ராஜ், சத்யராஜ், இயக்குனர் ஷக்தி சௌந்தர் ராஜன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;