ஜெயராம் படத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

ஜெயராம் படத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

செய்திகள் 9-Dec-2014 11:05 AM IST VRC கருத்துக்கள்

ஜெயராம், ஹனிரோஸ் ஜோடியாக நடிக்கும் மலையாள படம் ‘சர் சி.பி.’ இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கேரளாவிலுள்ள கோட்டயம் நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. நகராட்சி அதிகாரியின் அறை உட்பட அனைத்து இடங்களையும் இப்படக் குழுவினர் ஆக்ரமித்திருந்த நிலையில், நகராட்சிக்கு வந்த பொதுமக்கள், தாங்கள் வந்த வேலையை முடித்துக் கொள்ள முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த நகராட்சி அதிகாரி உட்பட பலர் அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடி அந்த படப்பிடிப்புக்கு எதிராக பெரும் கோஷமிட்டு, படப்பிடிப்பை நிறுத்தினர். இதனால் வேறு வழியில்லாமல் ஜெயராம் உட்பட படப்பிடிப்பு குழுவினர் அத்தனை பேரும் அங்கிருந்து வெளியேறினர். இந்தப் படப்பிடிப்புக்கு எழுத்து பூர்வமான எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், வாய் வழியான அனுமதி மட்டுமே தரப்பட்டிருந்தது என்றும் அறிந்த பொதுமக்கள் அதற்கும் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;