டிசம்பர் 18-ல் வைரமுத்து, யுவனின் முதல் ட்ரீட்!

டிசம்பர் 18-ல் வைரமுத்து, யுவனின் முதல் ட்ரீட்!

செய்திகள் 9-Dec-2014 10:16 AM IST VRC கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தின் மூலம் தேசிய விருதுபெற்ற இயக்குனர் சீனுராமசாமி. இவரது இயக்கத்தில் உருவாகி வந்த ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையில் முதன் முதலாக பாடல்களை எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

இப்படத்தின் மூலம் வைரமுத்துவும், யுவனும் முதன் முதலாக இணைந்துள்ளதால் இப்படப் பாடல்கள் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற 18-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் ‘இடம் பொருள ஏவல்’ படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;