ஐ டியூன்ஸில் ரஹ்மானுக்கு 3, அனிருத்துக்கு 1

ஐ டியூன்ஸில் ரஹ்மானுக்கு 3, அனிருத்துக்கு 1

செய்திகள் 9-Dec-2014 9:56 AM IST Chandru கருத்துக்கள்

ஆடியோ மார்க்கெட்டைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் மிக முக்கியமான வியாபாரத்தளம் ‘ஐ டியூன்ஸ்’ மட்டுமே. அதில் அதிகமுறை பதிவிறக்கம் செய்யப்படும் ஆல்பங்களே சிறந்த ஆல்பங்களாகவும் மதிப்பிடப்படுகின்றன. இந்த வருடம் ‘ஐ டியூன்ஸி’ல் விற்பனைக்கு வந்த ஆல்பங்களில் சிறந்த ஆல்பங்கள், அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பங்கள், அதிகமுறை பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்கள் ஆகியவற்றை ‘ஐ டியூன்ஸ்’ வரிசைப்படுத்தியுள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் இந்த வருடம் வெளிவந்த 4 ஆல்பங்களில் 3 ஆல்பங்கள் இடம்பிடித்துள்ளன. அதோடு அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த ‘கத்தி’ ஆல்பமும் இதில் இடம்பிடித்துள்ளது.

இந்த 2014ஆம் வருடம் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் ‘கோச்சடையான்’, ‘காவியத்தலைவன்’, ‘ஐ’, ‘லிங்கா’ ஆகிய நான்கு ஆல்பங்கள் வெளிவந்துள்ளன. அனிருத்தின் இசையமைப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’ ஆகிய 3 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன. மேற்படி ஆல்பங்களில் இந்திய அளவிலான ‘2014ஆம் ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பங்கள்’ பட்டியலில் ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ ஆல்பங்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் ‘2014ஆம் ஆண்டு அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பங்கள்’ பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கோச்சடையான்’, ‘காவியத்தலைவன்’, ‘ஐ’ ஆகிய ஆல்பங்களும், அனிருத்தின் ‘கத்தி’யும் இடம்பிடித்திருக்கின்றன.

அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்கள் பட்டியலில் எந்த தமிழ் ஆல்பத்தின் பாடலும் இடம்பெறவில்லை. இந்திய அளவிலான இந்த பட்டியல்களில் வேறெந்த தமிழ் இசையமைப்பாளர்களின் ஆல்பங்களும் இடம்பெறவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;