ரொமான்ஸ் பாடகரான சிவகார்த்திகேயன்!

ரொமான்ஸ் பாடகரான சிவகார்த்திகேயன்!

செய்திகள் 9-Dec-2014 9:41 AM IST Chandru கருத்துக்கள்

தன்னுடைய மிமிக்ரி திறமையால் விஜய் டிவியில் இடம்பிடித்து கலக்கிய சிவகார்த்திகேயன், ‘டைமிங் காமெடி’ மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். தனக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்து ‘சட்’டென ஹிட் கொடுத்து ‘பட்’டென முன்னுக்கு வந்தார். அவரின் அடுத்த படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆல்பத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

இதற்கு முன்பே ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் ‘‘ஊர காக்க உருவான சங்கம்....’’ என்ற பாடலையும், ‘மான் கராத்தே’வில் ‘‘ராயபுரம் பீட்டர்....’’ பாடலையும் பாடியிருக்கிறார். மேற்படி இரண்டு பாடல்களும் குத்துப் பாடல்கள். ஆனால், ‘காக்கி சட்டை’யில் அவர் பாடியிருக்கும் ‘ஐயாம் சோ கூல்...’ என்ற பாடல் மெலடி ரகத்தைச் சேர்ந்தது. காதலன் தன் காதலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவது போன்ற சூழ்நிலையில் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறுகிறது. இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்பாடலுக்கான படப்பிடிப்பு நார்வேயில் படமாக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் பட காட்சிகள்


;