மனோபாலாவை வாழ்த்திய ‘இளையதளபதி’ விஜய்!

மனோபாலாவை வாழ்த்திய ‘இளையதளபதி’ விஜய்!

செய்திகள் 8-Dec-2014 1:54 PM IST Chandru கருத்துக்கள்

இன்று (டிசம்பர் 8) நடிகர் மனோபாலாவுக்கு பிறந்தநாள். ரஜினி நடித்த ‘ஊர்க்காவலன்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ள மனோபாலா நடிகராகவும் அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் இயக்கத்திற்கு முழுக்குபோடும் அளவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு குவியத் தொடங்கியது. இதனால் தற்போது முழு நேரமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். வருடத்திற்கு மனோபாலா நடித்த 20 படங்களாவது தமிழில் வெளியாகிவிடும்.

திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் மனோபாலாவுக்கு, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரும் போன் மூலமும், நேரிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் போன் செய்து மனோபாலாவை பாராட்டியிருப்பதை ட்விட்டரில் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘தலைவா’ படத்தில் விஜய்யுடன் நடித்தார் மனோபாலா. அப்போது அவருடைய பிறந்தநாளை ‘தலைவா’ டீம் வெகு சிறப்பாக படப்பிடிப்புதளத்தில் கொண்டாடி மகிழ்ந்தது. நடிகர் விஜய்யும், மனோபாலாவும் ‘கேக்’ ஊட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். அந்த பிறந்தநாள் அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;