நெல்லையில் யுவனின் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்!

நெல்லையில்  யுவனின் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்!

செய்திகள் 8-Dec-2014 11:07 AM IST VRC கருத்துக்கள்

சிங்கப்பூர், மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வரும் பொங்கலன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரிலுள்ள பெல்பின்ஸ் திடலிலும் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரீன் த்ரீஸ் சொலியூஷன்ஸ் மற்றும் ஜெனி இன்ஃபோடெயின்மென்ட் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்ச்சியின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பேசிய யுவன், ‘‘ எங்கோ சென்று இசைப்பதைக் காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணி நான் தான் நெல்லையை தேர்ந்து எடுத்தேன் . எனது முதல் படமான ‘அரவிந்தன்’ இங்குதான் படமாக்கப்பட்டது . அதனால் தான் இந்த முடிவு’’ என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித் , விஜய் யேசுதாஸ், செந்தில்தாஸ், வாசு, சத்யன், பெல்லிராஜ், ஸ்வேதா பண்டிட் , ப்ரியா ஹிமேஷ் , பிரியதர்சினி , ரம்யா முதலானோர் பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்ச்சி ஜனவரி 17- ஆம் தேதி பாளையங்கோட்டையிலுள்ள பெல்பின்ஸ் திடலில் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;