‘லிங்கா’ ரிலீஸ் – புதிய சாதனை!

‘லிங்கா’ ரிலீஸ் – புதிய சாதனை!

செய்திகள் 8-Dec-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’வின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. உலகம் முழுக்க மிகப் பிரம்மாண்டமான முறையில் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படம் ரிலீசாகவிருக்கிறது. ‘லிங்கா’வை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் விநியோகிக்கும் உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 தியேட்டர்களில் ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் கேரளாவிலும் அதிக எண்ணிக்கையிலான, அதாவது 220 தியேட்டர்களுக்கும் அதிகமான தியேட்டர்களில் ‘லிங்கா’வை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது வரையிலும் எந்த ஒரு தமிழ் படமும் கேரளாவில் இவ்வளவு எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியானதில்லை என்று கூறப்படுகிறது. மலையாள் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் முதலானோர்களின் படங்கள் வெளியாவதை போல கேரளாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமும் வெளியாக இருப்பது, மலையாள திரையுலகினரை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;