என்ன செய்கிறார் இயக்குனர் லிங்குசாமி?

என்ன செய்கிறார் இயக்குனர் லிங்குசாமி?

செய்திகள் 8-Dec-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் நிறைய இருப்பதால், விஷாலை வைத்து ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்திற்கான கதையைத் துவக்கிவிட்டார் லிங்கு. இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் உடனடியாக ‘சண்டக்கோழி 2’விற்காக படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறார்கள். அனேகமாக ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்குப் பின்பே கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் லிங்கு.

இன்னொருபுறம் தன் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு, விநியோகம் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் லிங்குசாமி. கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தையும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தையும் இந்நிறுவனம்தான் தயாரிக்கிறது. ‘உத்தமவில்லன்’ தற்போது இறுதிகட்டப்பணிகளில் இருக்கிறது. ஜனவரி 23ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த இரண்டு படங்கள் தவிர்த்து விஜய்சேதுபதி, விஷ்ணு நடிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’, ‘ரா ரா ராஜ்சேகர்’, ‘நான்தான் சிவா’ போன்ற படங்களின் தயாரிப்பு/விநியோக வேலைகளிலும் பிஸியாக இருக்கிறது லிங்கு அன் கோ!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;