அஜித் படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்த அருண் விஜய்!

அஜித் படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்த அருண் விஜய்!

செய்திகள் 8-Dec-2014 9:25 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் நடிக்கிறார் அருண் விஜய். தன் 20 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக இப்படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார். பொதுவாகவே அஜித் படத்தைப் பொறுத்தவரை உடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் காட்சிகளில் முக்கியத்துவம் இருக்கும். இதற்கு உதாரணமாக ‘மங்காத்தா’வின் அர்ஜுன் கேரக்டரையும், ’ஆரம்பம்’ படத்தின் ஆர்யா கேரக்டரையும் சொல்லலாம். இதனால் ‘என்னை அறிந்தால்’ படத்தின் அருண் விஜய் கேரக்டருக்கும் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ டீஸரில் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. அனேகமாக அவர் டிரைலரில் தலைகாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய் பொதுவாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். இப்படத்திற்கு ஏற்கெனவே முறுக்கேறிய தன் உடம்பை இன்னும் இரும்பாக்கி ‘சிக்ஸ் பேக்’ தோற்றத்தை உருவாக்கியிருக்கிறாராம். படத்தில் இடம்பெறும் அவருடைய இந்த சிக்ஸ் பேக் காட்சிக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது படக்குழு. அருண்விஜய்யின் கட்டுமஸ்தான உடம்பைப் பார்த்து அஜித்தே வியந்து பாராட்டியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;