முதலிடத்தை நோக்கிப் பயணிக்கும் ‘என்னை அறிந்தால்’

முதலிடத்தை நோக்கிப் பயணிக்கும் ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 8-Dec-2014 9:00 AM IST Chandru கருத்துக்கள்

டிசம்பர் 4ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸருக்கு அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. 22 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களையும், 56 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்த இந்த டீஸர், தற்போது 80 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி இருக்கிறது (2,929,753).

அதோடு இந்திய அளவில் வேகமாக 50 ஆயிரம் ‘லைக்’களை கடந்த முதல் டீஸர் என்ற சாதனையையும் இந்த டீஸர் படைத்தது. தற்போது 80 மணி நேரத்தில் 68 ஆயிரம் ‘லைக்’குகளை நெருங்கியிருக்கிறது. இந்திய அளவில் அதிபட்ச ‘லைக்’குள் வாங்கிய டீஸர்/டிரைலர் பட்டியலில் இந்த டீஸர் தற்போது 3வது இடத்தில் இருக்கிறது. 2வது இடத்தில் ரித்திக் ரோஷனின் ‘க்ரிஷ் 3’ டிரைலரும் (72 ஆயிரம் லைக்குள்), முதலிடத்தில் சல்மான் கானின் ‘கிக்’ டிரைலரும் (1 லட்சம் லைக்குகள்) இருக்கின்றன. ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியான 4 நாட்களுக்குள்ளாகவே இவ்வளவு ‘லைக்’குகள் கிடைத்திருப்பதால் நிச்சயம் ‘கிக்’ டிரைலரின் 1 லட்சம் லைக்குகளை விரைவில் எட்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி நேற்று வரை, அதாவது கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு #YennaiArindhaalTeaserStormOnDec4 ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரென்ட் செய்த அஜித் ரசிகர்கள், தற்போது #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை நேற்று முதல் இந்திய அளவில் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். வரும் 11ஆம் தேதி ஹாரிஸின் இசையில் உருவாகியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top 10 Likes (Indian Movie Teaser/Trailer Record)

1. Kick Trailer - 100K
2. KRRISH 3 Trailer - 72K
3. Yennai Arindhaal Teaser - 68K
4. BANG BANG! Teaser - 60K
5. R...Rajkumar - 59K
6. DHOOM 3 Trailer - 58K
7. DHOOM 3 Teaser - 56K
8. I' - Official Teaser - 41K
9. Jab Tak Hai Jaan - Trailer - 41K
10. Happy New Year Trailer - 37K

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;