பிரசாந்துடன் இணைந்தார் அனிருத்!

பிரசாந்துடன் இணைந்தார் அனிருத்!

செய்திகள் 6-Dec-2014 1:42 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் ‘சாகச’த்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.

இப்படத்திற்காக ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல், மோஹித் சவான், சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், நடிகைகள் ஆன்ட்ரியா, லட்சுமி மேனன் முதலானோர் பாடல்களை பாடியிருக்கிற நிலையில், இசை அமைப்பாளர் அனிருத்தையும் ஒரு பாடலை பாட வைத்துள்ளனர் இசை அமைப்பாளர் தமனும், பிரசாந்தும்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் லட்சுமி மேனன் பாடிய பாடலின் பதிவு நடந்தது. அதனை தொடர்ந்து இப்போது அனிருத் பாடிய பாடலை பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனராம் ‘சாகசம்’ படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;