அல்ஜீரியா நாட்டுக்குப் பறந்த ‘உத்தமவில்லன்’ படக்குழுவினர்!

அல்ஜீரியா நாட்டுக்குப் பறந்த ‘உத்தமவில்லன்’ படக்குழுவினர்!

செய்திகள் 6-Dec-2014 12:47 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ என 3 படங்கள் தயாராகி வருகிறது. இந்தப் படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, முதலில் ‘உத்தமவில்லன்’ படம் ரிலீசாக தான் வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசனே ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். ஆனால் ‘உத்தமவில்லன்’ படத்தின் வேலைகள் இன்னமும் முடியவில்லை! இப்படத்திற்கான கிராஃபிக்ஸ் ஒர்க் மற்றும் ஒரு சில பாடல்களின் பதிவு பணிகள் மிச்சம் இருக்கிறது. இந்த வேலைகளை அல்ஜீரியா நாட்டில் செய்ய திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசை அமைப்பாளர் ஜிப்ரான் முதலானோர் அதற்காக சமீபத்தில் அல்ஜீரியா நாட்டுக்குப் பறந்துள்ளனர். இந்த வேலைகளை முடித்துக் கொண்டதும் ‘உத்தம வில்லன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;