இந்திய அளவில் சாதித்த 'ஐ', 'என்னை அறிந்தால்'!

இந்திய அளவில் சாதித்த 'ஐ', 'என்னை அறிந்தால்'!

கட்டுரை 6-Dec-2014 12:05 PM IST Chandru கருத்துக்கள்

தியேட்டர் எண்ணிக்கை, பாக்ஸ் ஆபீஸ், ஃபர்ஸ்ட் டே ஓபனிங், டீசர் / டிரைலர் பார்வையாளர்கள் எண்ணிக்கை இவையெல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட் படங்களின் ஆதிக்கம்தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த சாதனைப் பட்டியல்களில் தமிழ்ப் படங்களும் இடம்பிடித்து வருகின்றன என்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் சூப்பர்ஸ்டாரின் ‘எந்திரன்’ படமும், உலகநாயகனின் விஸ்வரூபம் படமும் ‘டாப் 20’ பட்டியலில் இடம்பிடித்து இந்த கணக்கைத் துவக்கி வைத்தது.

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த ஷங்கர், விக்ரமின் ‘ஐ’ படத்தின் டீஸர் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. முதன்முறையாக ஒரு தென்னிந்திய படத்தின் டீஸர் 50 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. அதோடு இந்திய அளவிலான டிரைலர்/டீஸர் ‘யு டியூப்’ பார்வையாளர்களின் ‘டாப் 10’ பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது ‘ஐ’. விரைவில் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தொடுமேயானால் சச்சின் அடித்த முதல் 200 ரன் களைப் போல தமிழ் சினிமா வரலாற்றில் ‘ஐ’யின் சாதனை இடம்பெறும்.

‘யு டியூப்’பில் வெளியிடப்படும் டீஸர்/டிரைலர்/மோஷன் போஸ்டர் இவற்றைப் பொறுத்தவரையில் இதுவரை பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே சாதனையாகப் பார்த்து வந்தார்கள். முதல்முறையாக அவை பெறும் ‘லைக்’குகளையும் சாதனையாகப் பார்க்க வைத்திருக்கிறது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸர். இந்திய அளவில் 50 ஆயிரம் ‘லைக்’குகளை வெறும் 48 மணி நேரத்தில் பெற்று சாதித்திருக்கிறது இந்த டீஸர். இதற்கு முன்பு சல்மான் கானின் ‘கிக்’ டிரைலர் 72 மணி நேரத்திற்குள் இந்த சாதனையைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 1 லட்சம் ‘லைக்’குகளுக்கு மேல் வாங்கிய டிரைலர் என்ற சாதனையை ‘கிக்’ இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல் ட்விட்டரில் ‘டிரென்ட்’ செய்யும் கலாச்சாரம் தற்போது தலைவிரித்தாடுகிறது. எந்த நடிகருடைய ரசிகர்களின் ‘டேக்’ எத்தனை நாட்கள் இந்திய டிரென்டில் இருக்கிறது, அதன் மூலம் எத்தனை லட்சம் ‘ட்வீட்’கள் செய்யப்படுகின்றன என்பதும் இப்போது சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அஜித் ரசிகர்கள் தொடர்ந்து 4 நாட்களாக #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து இந்திய டிரென்டில் வைத்திருக்கிறார்கள். அதோடு இந்த டேக்கைப் பயன்படுத்தி இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களும் செய்யப்பட்டுள்ளதாம். தென்னிந்திய படங்களைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்ச சாதனை. அக்ஷய் குமார் நடிக்கும் ‘பேபி’ படத்தின் டிரைலர் குறித்த ஹேஷ்டேக் ஒன்று சமீபத்தில் தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேல் இந்திய டிரென்டில் இருந்திருக்கிறது.

‘என்னை அறிந்தால்’ பட டீஸரின் சாதனைத் துளிகள்:

1. தொடர்ந்து 4 நாட்கள் இந்திய அளவில் டிரென்ட் (#YennaiArindhaalTeaserStormOnDec4)
2. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ‘ட்வீட்’கள் (#YennaiArindhaalTeaserStormOnDec4).
3. இந்திய அளவில் அதிவேக 50 ஆயிரம் ‘லைக்’குகள் வாங்கிய டீஸர் (48 மணி நேரத்தில்)
4. தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்ச ‘லைக்’ வாங்கியிருக்கும் டீஸர். (54K)
5. தென்னிந்திய அளவில் ‘ஐ’யைத் தொடர்ந்து வேகமாக 2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற டீஸர். (35 மணி நேரத்திற்குள் ‘ஐ’, 56 நேரத்திற்குள் ‘என்னை அறிந்தால்’)

(குறிப்பு : ‘லைக்’கைப் பொறுத்தவரை இந்திய அளவில் ‘என்னை அறிந்தால்’ டீஸர் விரைவில் 3வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது)

‘ஐ’யின் சாதனைத் துளிகள் :

1. தென்னிந்தியப் படங்களிலேயே அதிகபட்ச பார்வையாளர்களைக் கொண்ட டீஸர்.
2. முதன்முதலில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த முதல் தென்னிந்திய படம்.
3. இந்திய அளவிலான டீஸர்/டிரைலர் வீடியோக்களின் ‘டாப் 10 பார்வையாளர்’களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே தென்னிந்திய படம்.

(கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் முடிந்தளவுக்கு கவனமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதாவது படங்கள் விடுபட்டிருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். பரிசீலிக்கப்பட்டு மாற்றம் செய்து கொள்கிறோம்).

left

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;