புதுமுக கூட்டணியின் சவரிக்காடு!

புதுமுக கூட்டணியின் சவரிக்காடு!

செய்திகள் 6-Dec-2014 9:48 AM IST VRC கருத்துக்கள்

‘அன்னை தெரசா ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘சவரிக்காடு’. இப்படத்தில் கிருஷ்ணகுமாருடன் கதாநாயகர்களாக ரவிச்சந்திரன், ராஜபாண்டி ஆகியோரும் நடிக்க, கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ‘ரோபோ’ சங்கர், சண்முகராஜன், அல்வா வாசு ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.டி.இந்திரவர்மன் இசை அமைத்துள்ளார். பல புதுமுகங்கள் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கேயார், டி.சிவா மற்றும் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘அட்டகத்தி’ ரஞ்சித் முதலானோர் சிறப்பு விருத்தினர்களாக கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டனர்.

பழனி பக்கத்திலுள்ள சவரிக்காடு பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘சவரிக்காட்டுக்குள் நடக்கும் கதை தான் இப்படம்! இந்த சவரிக்காட்டோட ரகசியங்களை தெரிந்த பிறகு யாரும் அந்த காட்டை விட்டு உயிரோட வெளியே போக முடியாது என்பது மாதிரியான திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்த சவரிகாட்டிற்குள் நடக்கும் த்ரில் சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். கே.கோகுல் ஒளிப்பதிவில் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தை வெகுவிரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கனவு போல - டிரைலர்


;