2 மகன்களுடன் ஜெயபிரகாஷ் நடிக்கும் ஐவராட்டம்!

2 மகன்களுடன் ஜெயபிரகாஷ் நடிக்கும் ஐவராட்டம்!

செய்திகள் 6-Dec-2014 9:42 AM IST VRC கருத்துக்கள்

கிரிக்கெட்டை விட்டால் இன்று இந்தியாவில் வேறு விளையாட்டே இல்லை என்பது போன்ற ஒரு தோற்றம் பெரும்பாலான இளைஞர்களிடம் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு கிரிக்கெட்டை விட பல நல்ல விளையாட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு விளையாட்டு கால் பந்தாட்டம் என்பதை அனைவருக்குமாக உணர்த்த வரும் படம் ‘ஐவராட்டம்’.

‘சுப.செந்தில் பிக்சர்ஸ்’ மற்றும் ‘த வைப்ரன்ட் மூவீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை மிதுன் மாணிக்கம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் குறித்து மிதுன் மாணிக்கம் கூறியதாவது,

‘‘சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை கதை இது! இன்று இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நிகராக கால்பந்தாட்டமும் புகழ்பெற்று வருகிறது. அது தவிர வழக்கமான சினிமாவில் இருந்து விலகி விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் தயாராகி வருகிறது. அதில் நாங்களும் பங்கு கொள்கிறோம் எனும்போது பெருமையாக இருக்கிறது. அடுத்த தலைமுறை அறிவுபூர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விளையாட்டு முக்கியம் என்பதை கமர்ஷியலாக இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது’’ என்றார்.

இப்படத்தில் நடிகர் ஜெயபிரகாஷின் மூத்த மகன் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஜெயபிரகாஷின் இளைய மகனான துஷ்யந்த் ஜெயபிரகாஷும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் நித்யா ஷெட்டி நடிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.கே.செந்தில்குமார், ராதாரவி முதலானோருடன் ஜெயபிரகாஷும் முக்கியமான் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, கடம் வித்வான் குக்கு விநாயகத்தின் பேரனும், இசை அமைப்பாளர் செல்வகணேஷின் மகனுமான சுவாமி நாதன் இசை அமைத்திருக்கிறார். ரவீந்திரநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரபல காலபந்தாட்ட வீரர் பிரதீப் கலந்துகொண்டு கால்பந்தை வைத்து பல சாகசங்களை செய்து விழாவில் கலந்துகொண்ட அத்தனை பேருடைய கைத் தட்டல்களையும் பெற்றார்.

அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள ‘ஐவராட்டம்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லென்ஸ் - டிரைலர்


;