சத்தமில்லாமல் சாதித்த சிவகார்த்திகேயன்!

சத்தமில்லாமல் சாதித்த சிவகார்த்திகேயன்!

செய்திகள் 5-Dec-2014 12:04 PM IST Chandru கருத்துக்கள்

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்கள், 150 நாட்கள், 200 நாட்கள் ஓடுவதுதான் சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட இப்போதெல்லாம், ஒரு படத்தின் டீஸர், டிரைலர் ஆகியவை ‘யூ டியூப்’பில் செய்யும் சாதனைகள்தான் பெரிதாக கவனிக்கப்படுகின்றன. அந்த வகையில், டிசம்பர் 4ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸர் 34 மணி நேரத்தில் 14 லட்சம் பார்வையாளர்களையும், 42 ஆயிரம் ‘லைக்’குகளையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த செய்திதான் தற்போது சோஷியல் மீடியாக்களை அதிகம் ஆக்ரமித்திருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, வளர்ந்து வரும் நாயகனான சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’யும் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயனின் இப்படத்திற்கு கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான 6 நாட்களுக்குள் இந்த மோஷன் போஸ்டருக்கு தற்போது ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். திரையுலகில் நுழைந்து 3 வருடங்களில், 7 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஒரு வளரும் நாயகனுக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைத்திருப்பது நிச்சயம் ஒரு சாதனைதான்.

வசூலில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தின் டீஸரை 10 லட்சம் பேரும், டிரைலரை 16 லட்சம் பேரும் இதுவரை கண்டுகளித்துள்ளார்கள். எனவே, ‘காக்கி சட்டை’ படத்தின் டீஸர், டிரைலருக்கு இதைவிட அதிக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;