‘லிங்கா’வுடன் களமிறங்கும் ‘காக்கி சட்டை’

‘லிங்கா’வுடன் களமிறங்கும் ‘காக்கி சட்டை’

செய்திகள் 5-Dec-2014 10:29 AM IST Chandru கருத்துக்கள்

‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காக்கி சட்டை’ படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று (டிசம்பர் 5) வெளியாகும் என நவம்பர் 28ஆம் தேதி வெளியான ‘காக்கி சட்டை’ மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக இப்படத்தின் இசை வெளியீட்டை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். அன்றுதான் ‘லிங்கா’ படம் உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது.

சிறு வயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதோடு, இசையமைப்பாளர் அனிருத் ரஜினியின் உறவினரும்கூட. தவிர படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரஜினியின் மருமகன் என்பதால், டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை தங்களின் பாடல் வெளியீட்டோடு கோலாகலமாக கொண்டாடவிருக்கிறது ‘காக்கி சட்டை’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;