‘லிங்கா’வின் கேரள உரிமை யார் வசம்?

‘லிங்கா’வின் கேரள உரிமை யார் வசம்?

செய்திகள் 5-Dec-2014 9:47 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’ படத்தை உலகம் முழுக்க பிரபல ‘ஈராஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிறுவனத்திடமிருந்து பெரும் விலை கொடுத்து ‘லிங்கா’வை தமிழ்நாடு முழுக்க வெளியிடும் உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. நேற்று முன் தினம் வரை ‘லிங்கா’வின் கேரள விநியோக உரிமை யாருக்கும் தரப்படாமல் இருந்தது. இந்நிலையில் ‘லிங்கா’வை கேரளாவில் வெளியிடும் உரிமையை தமிழகத்தில் இப்படத்தை வெளியிடும் அதே ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனமே கைபற்றியுள்ளது. ரஜினி நடித்த படங்களிலேயே இப்படம் அதிக விலைக்கு கேரளாவில் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, ரஜினியின் ‘லிங்கா’வை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடுவதற்கான வேலைகளில் வேந்தர் மூவீஸ் நிறுவனம் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;