அஜித்தைத் தொடர்ந்து அக்ஷயுடன் ராணா!

அஜித்தைத் தொடர்ந்து அக்ஷயுடன் ராணா!

செய்திகள் 4-Dec-2014 5:36 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் அவரது நண்பனாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார். இப்படத்தில் ‘ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாடி’ல் பணிபுரியும் வீரர் அசோக்குமாராக அஜித்தும், ஏபிசி சஞ்சய்யாக ராணா டகுபதியும் நடித்திருந்தார்கள். ‘நட்புக்காக’ இப்படத்தில் கொஞ்சம் நேரம் வரும் ராணா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

கிட்டத்தட்ட ‘ஆரம்பம்’ படத்தில் கிடைத்த அதே கேரக்டர்போல் ஹிந்திபடமான ‘பேபி’யிலும் ராணாவிற்கு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் ‘கவுன்ட்டர் இன்டலிஜென்ட் ஏஜென்ட்’டாக அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். அவருடைய டீமில் இருக்கும் ஒரு முக்கிய ஆளாக ராணா நடித்திருக்கிறார். ‘ஏ வென்னஸ் டே’, ‘ஸ்பெஷல் 26’ ஆகிய படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்கியிருக்கிறார். முக்கிய வேடªமொன்றில் டாப்ஸியும் பங்களித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டிரைலர் வெளியாகி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘பேபி’ ஹிந்தி படம் வரும் ஜனவரி 23ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;