விஜய் படத்துக்காக ஹன்சிகா செய்யும் சாகஸம்!

விஜய் படத்துக்காக ஹன்சிகா செய்யும் சாகஸம்!

செய்திகள் 4-Dec-2014 4:43 PM IST Chandru கருத்துக்கள்

திரையுலகில் நுழைந்து இன்றோடு 22 வருடங்களைக் கடந்திருக்கும் விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார்கள். இரண்டு வித்தியாசமான காலகட்டங்களில் நடக்கும் இப்படத்தில், மன்னர் காலகட்டத்தின் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவியும், இளவரசியாக ஹன்சிகாவும், தளபதியாக சுதீப்பும் நடிக்கிறார்கள். இதற்கான படப்பிடிப்பு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை ஈசிஆரில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான செட் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து தற்போது 2ம் கட்டப் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இதில் ஹன்சிகா பங்குபெறும் சில வாள் சண்டைக் காட்சிகளும் இடம்பெறவிருக்கிறது. இதற்காக ஹன்சிகா வாள் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;