‘லிங்கா’வுடன் மோதும் தியேட்டர்ல 4 பேர்!

‘லிங்கா’வுடன் மோதும் தியேட்டர்ல 4 பேர்!

செய்திகள் 4-Dec-2014 1:32 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’ வருகிற 12-ஆம் தேதி, ரஜினியின் பிறந்த நாளையொட்டி மிகப் பிரம்மாண்டமான முறையில் உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. ரஜினி நடித்த படங்களிலேயே உலகம் முழுக்க, அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ‘லிங்கா’ வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்துடன் மோத 2 படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படம் ‘யாரோ ஒருவன்’. இன்னொரு படம் ‘தியேட்டர்ல 4 பேர்’. பொதுவாக ரஜினி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீசாகிற நாட்களில் வேறு படங்களை வெளியிட தயங்குவார்கள்! ஆனால் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும், கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் முதலான தமிழ் சினிமாவின் மாபெரும் பிரபலங்கள் கூட்டணி அமைத்துள்ள ’லிங்கா’வுடன் மோதும் வகையில் இப்படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள அப்படக் குழுவினரை பாராட்டலாம்! ஆனால் ‘யாரோ ஒருவன்’, ’தியேட்டர்ல 4 பேர்’ போன்ற பட தலைப்புகளோடு வெளியாகும் இப்படங்கள் அந்த பட தலைப்புகளின் அர்த்தத்தை மெய்ப்பிக்கும் வகையில் அமையாமல் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;