கதிகலங்க வைக்கும் முன்னாள் நடிகையின் பரிதாப நிலை!

கதிகலங்க வைக்கும் முன்னாள் நடிகையின் பரிதாப நிலை!

செய்திகள் 4-Dec-2014 12:57 PM IST VRC கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கிய ‘டிக் டிக் டிக்’, மற்றும் ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘இளமை இதோ இதோ’, ‘மனாமதுரை மல்லி’ உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிஷா. இவரது சொந்த ஊர் நாகூர். அவரை பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் இதோ!

நாகப்பட்டிணத்தில் உள்ள நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க அடையாளம் தெரியாத நிலையில் கிடந்துள்ளார் நிஷா. பிறகு ஒரு சிலருக்கு அவரை அடையாளம் தெரிந்ததும், அவர்கள் மூலம் அவர் முன்னாள் நடிகை என்பது எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது. அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை யாரும் கவனிக்க ஆளிலாத நிலையில் அவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமான செய்திகள் சமீபத்தில் சில இணையந்தளங்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகைகளில் பரவியதை தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினாரான நீதிபதி முருகேசன் இந்த விஷயம் தேசிய மனித உரிமை ஆணையத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை கையில் எடுத்த அந்த அமைப்பினர், இந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று கேட்டு நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், அந்த நடிகைக்கு தேவையான உதவிகளை செய்யக் கூறியும் நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நிஷாவின் அப்பா, பெரியப்பா, அத்தை என ஒரு உறவினர் கூட்டமே அந்த ஊரில் வசதியாக வசித்து வரும் நிலையில் தங்க இடம் இல்லாமலும், ஆதரவு கரம் நீட்ட யாரும் இல்லாத நிலையிலும் அவர் இப்படி தெருவில் அனாதையாக கிடப்பது வேதனை தரும் விஷயமாகும் என்று நீதிபதி முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;