‘ஐ’, ‘கத்தி’ சாதனையை முறியடித்த ‘என்னை அறிந்தால்’

‘ஐ’, ‘கத்தி’ சாதனையை முறியடித்த ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 4-Dec-2014 12:35 PM IST Chandru கருத்துக்கள்

நேற்று இரவு அஜித் ரசிகர்களுக்கு சிவராத்திரி. விடிய விடிய காத்திருந்து ‘என்னை அறிந்தால்’ டீஸரை கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த டீஸர் குறித்த #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிய ‘ட்வீட்’ இப்போது வரை 2.5 லட்சத்தை எட்டியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு ‘ட்வீட்’கள் இதுவரை செய்யப்படவில்லை.

இது ஒரு சாதனையென்றால், நேற்று 12 மணிக்கு வெளியான ‘என்னை அறிந்தால்’ டீஸர் இப்போது 12 மணிக்குள் 5 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ‘ஐ’ படம்தான் முதல் 12 மணிநேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது. அதன்பிறகு ‘என்னை அறிந்தால்’ பட டீஸருக்குதான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

அதோடு 12 மணி நேரத்தில் இந்த டீஸருக்கு 25 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்திருக்கின்றன. இதுவரை எந்த தென்னிந்திய படத்தின் டீஸரும் 12 மணி நேரத்தில் இவ்வளவு ‘லைக்’குகளை குவிக்கவில்லை (வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும்). 88 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்த ‘ஐ’ படத்தின் டீஸருக்கே இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘கத்தி’ படத்தின் டீஸருக்கு 1 நாளில் 20 ஆயிரம் ‘லைக்’குகள் கிடைத்தன. இதுவே முந்தைய அதிகபட்ச சாதனையாக இருந்தது. இப்போது அதை ‘என்னை அறிந்தால்’ முறியடித்திருக்கிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த டீஸருக்கு பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;