மீண்டும் இணைகிறதா விக்ரம் - விஜய் கூட்டணி?

மீண்டும் இணைகிறதா விக்ரம் - விஜய் கூட்டணி?

செய்திகள் 4-Dec-2014 9:00 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கல் ரிலீஸாக வெளிவரவிருக்கிறது. தற்போது ‘கோலி சோடா’ புகழ் விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். ஆரம்பித்து 2 மாதங்களே ஆன நிலையில் இப்படம் படுவேகமாக வளர்ந்து வருகிறதாம். விஜய் மில்டனின் இந்த சுறுசுறுப்பான இயக்கத்தைக் கண்டு வியந்திருக்கிறார் விக்ரம்.

இப்படத்தின் ஷுட்டிங் இடைவெளியில் கிடைத்த ‘கேப்’பில் இன்னொரு ‘பக்கா’வான ஆக்ஷன் ஸ்கிரிப்டை தயார் செய்து கொண்டிருக்கிறாராம் விஜய் மில்டன். இந்த ஸ்கிரிப்ட்டின் ‘ஒன் லைனை’க் கேட்ட விக்ரம், ‘இப்படத்திலும் நானே நடிக்கிறேன்’ என ஆர்வமாக விஜய் மில்டனிடம் கூறியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் வேலைகள் முடிவதற்கு எப்படியும் 2015 பிப்ரவரி ஆகிவிடும். அதன்பிறகு ஒரு சிறிய ஓய்வுக்குப் பின்னர் விஜய் மில்டன் - விக்ரம் மீண்டும் இணையும் படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிபாஷா பாசு ஐஸ் பக்கெட் சவால் - வீடியோ


;